டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெளியே கேட்பாரற்று 3 பைகள் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெளியே கேட்பாரற்ற நிலையில் 3 பைகள் கிடந்தன. இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் அந்த 3 பைகளிலும் துணிகள் இருந்தது தெரிய வந்தது.

இன்று கட்சி அலுவலகத்திற்கு வருகைதர உள்ள நிலையில், மர்மபைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply