நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று நரந்திர மோடி தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் பதவியை வகித்து வந்த ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை மந்திரி ஆனதை தொடர்ந்து பாஜக.,வுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலை உருவானது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாரதீய ஜனதாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. புதிய தலைவராக அமித்ஷா நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாயின.அமித்ஷா உத்தரபிரதேச மாநில பா.ஜ.க பொறுப்பாளராகவும் செயல்பட்டு, அம்மாநிலத்தில் பா.ஜனதா 71 தொகுதிகளில் வெற்றிபெற காரணமாக இருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க ஆட்சிமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒருமனதாக அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அமித்ஷா முறைப்படி பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு,பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங், அத்வானி, உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.அமித் ஷா, குஜராத் மாநில உள்துறை அமைச்சரகாவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

அமித்ஷா பாரதீய ஜனதா தலைவராக அறிவிக்கப்பட்டதையடுத்து பாஜகவினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து மாநிலங்களிலும் பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசுவெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்சியை வெளிபடுத்தினர்.

Leave a Reply