பிரதமர் மோடியின் உத்தரவுப்படி உள்த்துறையில் 11 ஆயிரம் ஆவணங்கள் அழிக்கப்பட்டன. இவற்றில் ஒன்றுகூட மகாத்மாகாந்தி கொலை சம்பந்தப்பட்டது கிடையாது’ என மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் பாதுகாத்துவைக்கப்பட்டு இருந்த ஒன்றரை லட்சம் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றில் மகாத்மா காந்தி படுªகொலை சம்பந்தப்பட்டவையும் அடங்கும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி. ராஜீவ், 2 தினங்களுக்கு முன் குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான ஆவணங்கள் குவித்துவைக்கப்பட்டு இருந்தன. பணியிடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், அலுவலகங்களில் பணிகலாசாரத்தை ஒழுங்குப்படுத்தவும் தேவையற்ற ஆவணங்களை அழிக்கும்படி பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டார்.

அதன் படி, ஆவண பாதுகாப்பு விதி முறைகளுக்கு உட்பட்டு, ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் தேவையற்ற ஆவணங்கள் என்று முடிவுசெய்யப்பட்ட 11 ஆயிரம் ஆவணங்கள், கடந்த 5ம்தேதி முதல் 8ம்தேதி வரை அழிக்கப்பட்டன.இவற்றில் ஒன்றுகூட, மகாத்மா காந்தி கொலை சம்பந்தப்பட்டவை இல்லை . அதோடு, ராஜேந்திரபிரசாத், லால்பகதூர் சாஸ்திரி மற்றும் லார்ட் மவுன்ட்பேட்டன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் அழிக்கப்படவில்லை. இந்தவிஷயத்தில் எம்.பி. தவறான தகவலை கொடுத்துள்ளார். மகாத்மாகாந்தி சம்பந்தப்பட்ட 52 ஆவணங்கள், 67 ஆதாரபொருட்கள், 11,186 ஆவண தாள்கள் போன்றவை தேசிய ஆவணபாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பாக உள்ளன. என்று அறிக்கையில் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

Leave a Reply