விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் கிரிராஜ்கிஷோர் தில்லியில் ஞாயிற்றுக் கிழமை காலமானார். அவருக்கு வயது 94.

உ.பி.,யில் கடந்த 1920ம் ஆண்டு பிறந்த கிரிராஜ்கிஷோர், தனது இளம்வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் 1983ம் ஆண்டு விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற முதலாவது பாரதமாதா பேரணி நிகழ்ச்சியின் போது, தன்னை அந்த அமைப்புடன் இணைத்து கொண்டார். விஸ்வஹிந்து அமைப்பின் சர்வதேச பிரிவின் மூத்த துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்துவந்தார்.

இது குறித்து விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் தில்லி மாநில செய்திதொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் கிரிராஜ் கிஷோர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தில்லி ஆர்கே. புரத்தில் உள்ள விஸ்வஹிந்து பரிஷத் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது உயிர் அமைதியான முறையில் பிரிந்தது’ என்றார்.

பிரேசிலுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் வலைதளத்தில், கிரிராஜ் கிஷோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply