‘பயோ எரிபொருளில் இயங்கும் கார்கள், இந்தியசாலைகளில் ஓடுவதற்கு ஏதுவாக, சர்வதேச தரத்திற்கு ஏற்றவகையில், தேவையான சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்படும்,” என்று , மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்

பாஜக, மரபுசாரா எரி பொருள் பிரிவு சார்பில், டில்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், நிதின்கட்காரி பேசியதாவது: மாற்று எரிபொருட்களில், குறிப்பாக பயோ எரி பொருளில் இயங்கும் கார்களை, இந்திய சாலைகளில் ஓட அனுமதிக்கவேண்டும் எனில், சர்வதேச தரத்திற்கு இணையாக, தற்போதுள்ள சட்டங்களில், திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த சட்டத்திருத்தம், பார்லிமென்டின் அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும். அத்துடன், தற்போது, 2 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், இ – ரிக் ஷாக்களை அனுமதிப்பது தொடர்பாகவும், சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும். அதற்குமுன், அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனைகள் கேட்கப்படும். மேலும், அமெரிக்கா, கனடா, பிரேசில் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அமலில் உள்ள வாகனச்சட்டங்கள் குறித்தும் ஆய்வுசெய்யப்படும்.

நாட்டின் எரிபொருள் இறக்குமதி, ஆண்டுக்கு, ஆறு லட்சம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. அதனால், மாற்று எரிபொருள் பயன் பாட்டை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியமானது. அத்துடன், உயிரி எரி வாயு உற்பத்தியை அதிகரிக்க, ஒவ்வொரு கிராமங்களிலும், ‘பயோடைஜெஸ்டர்’ நிறுவுவது குறித்தும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. என்று கட்காரி கூறினார்.

Tags:

Leave a Reply