வேத்பிரகாஷ் வைதிக் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத தலைவர் ஹபீஸ்சயீத் ஆகியோர் சந்திப்புக்கும், மத்திய அரசுக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது. எங்களுக்கும், இந்தசந்திப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி இதைத்திரித்து மக்களை திசைதிருப்ப பார்க்கிறது என்று கூறியுள்ளார்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். இது குறித்து லோக்சபாவில் இன்று அவர் அளித்த விளக்கத்தின்போது, இது காங்கிரஸ்சின் பிரித்தாளும் தந்திரமாகும். இந்தசந்திப்புக்கும், அரசுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை, சம்பந்தமும் இல்லை.

மத்திய அரசு அல்லது பாஜக சார்பில் வேத்பிரகாஷ் வைதிக், சயீத்தை சந்திக்கவில்லை. சந்திக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்படவும் இல்லை. இது அவரது தனிப்பட்ட பயணம். தனிப்பட்ட சந்திப்பு. மத்திய அரசு மீது காங்கிரஸ் பழி மத்துவது தவறானது, துரதிர்ஷ்டவசமானது என்றார் சுஷ்மா.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், மக்களைத் திசைதிருப்ப காங்கிரஸ் முயல்கிறது. இதன்மூலம் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எதிரான பிரசாரத்தை அது தூண்டிவிட்டுள்ளது என்றார். “ஆர்எஸ்எஸ்ஸுக்கும், வைதிக்குக்கும் தொடர்பி்ல்லை”

இதற்கிடையே ராம் மாதவ் கூறுகையில், வைதிக், ஆர்எஸ்எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவருக்கும், அமைப்புக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது. இவர் மணிசங்கர அய்யர், சல்மான் குர்ஷித் போன்றோருடன் சுற்றுபவர். அவருக்கும், ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையே எப்படி தொடர்பு இருக்கமுடியும். ஆனால் ஹபீஸ் சயீத் ஒரு தீவிரவாதி. இந்தியாவை பொறுத்தவரை அவர் குற்றவாளி. அதை யாரும் மறுக்கமுடியாது என்றார் அவர்.

Tags:

Leave a Reply