மாவோயிஸ்டுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து உதவிகிடைப்பதாக உள்துறை இணை அமைச்சர் கிரண்ரிஜ்ஜூ திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். லோக் சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ மேலும் கூறியதாவது:

மாவோயிஸ்டுகளில் மூத்த தளபதிகள் சிலருக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட்கட்சி 2005ஆம் ஆண்டு பயிற்சி அளித்தது. இந்திய அரசுக்கு எதிராக மக்கள்யுத்தம் என்ற பெயரில் மாவோயிஸ்டுகள் நடத்திவரும் வன்முறை செயல்களுக்கு ஹாலந்து, ஜெர்மனி, பிரான்ஸ்,துருக்கி மற்றும் இத்தாலி நாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கின்றன. மாவோயிஸ்டுகளுக்கு பிலிப்பைன்ஸ் மற்றும் துருக்கியில் உள்ள மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் மிகநெருங்கிய தொடர்பு இருக்கிறது. பிடிபட்ட மாவோயிஸ்டுகளிடம் வெளிநாட்டு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அதேபோல் மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாட்டில் இருந்தும் நிதிஉதவி கிடைத்து வருகிறது. என்று கிரண் ரிஜ்ஜூ கூறினார்.

Tags:

Leave a Reply