ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிக்களுக்கான தேர்வுமுறை மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளை வழங்கியபின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய மத்திய இணைஅமைச்சர் ஜிதேந்தரசிங், அர்விந்த்வர்மா தலைமையிலான 3 நபர் குழு இந்தவிவகாரம் இப்பிரச்னை குறித்து ஆய்வுசெய்யும் என்று தெரிவித்தார். அந்தகுழுவின் அறிக்கையை பரிசீலித்த பின்னர், தேர்வுமுறைகளை மாற்றுவது மற்றும் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். ஆகையால் மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தை கைவிடவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பாடத்திட்டத்திலும், தேர்வு முறையிலும் தெளிவுகிடைக்கும் வரை முதல்நிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என யு.பி.எஸ்.சி-ஐ மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். யு.பி.எஸ்.சி தேர்வுமுறையில் மாற்றம் செய்யக்கோரி ஏராளமானோர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வந்ததையடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

Tags:

Leave a Reply