‘நதிகள் இணைப்புதொடர்பாக, மூன்று திட்டங்களை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இருப்பினும் , சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒப்புதல் தந்தால் மட்டுமே, இந்த நதிகள் இணைப்புத்திட்டம் மேற்கொள்ளப்படும்,” என்று , மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, தெரிவித்துள்ளார்.

நதிகள் இணைப்பு தொடர்பாக, நேற்று லோக் சபாவில் பேசிய, மத்திய நீர்வளத் துறை அமைச்சர், உமாபாரதி கூறியதாவது: நதிகள் இணைப்பு தொடர்பாக, மூன்றுதிட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கென் – பெட்வா நதிகள், தாமன் கங்கா – பிஞ்சால் நதிகள் மற்றும் பார்தாவி – நர்மதா நதிகள் இணைக்கப்படும். இந்த நதிகள் இணைப்புதொடர்பான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியில், தேசிய நீர்மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டது.

மூன்று திட்டங்களில், கென் – பெட்வா, தாமன்கங்கா – பிஞ்சால் நதிகள் இணைப்பு தொடர்பான திட்டஅறிக்கைகள், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒப்புதல் தந்தால் மட்டுமே, இந்ததிட்டம் மேற்கொள்ளப்படும். மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், நதிகள் இணைப்புபணியை மேற்கொள்ள முடியாது. இந்த மூன்று நதிகள் இணைப்பால், 8.64 கோடி ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். 34 ஆயிரம் மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதுதவிர, குடிதண்ணீர் பிரச்னை தீரும்; மீன்வளம் அதிகரிக்கும். பல பகுதிகளில் உள்ள தண்ணீரின் உப்புத் தன்மை குறைவதோடு, சுற்றுச் சூழல் மாசுபடுவதும் கட்டுப்படும் என்றார்

Leave a Reply