கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, இலங்கை விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அணுகு முறை பாதகமாகவே இருந்துள்ளது.ஆனால் பாஜக ஆட்சியில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டே வகுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களை அடிமைப் படுத்தும் ராஜபக்சவின் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு ஏற்காது. பாஜக. தலைமையிலான மத்திய அரசு எந்தமாநிலத்திற்கும் பாதகமாக செயல்படாது. ராயபுரம்பகுதியை 3வது ரயில்வே முனையமாக மாற்றும் ஆய்வுப் பணிகள் துவங்கியுள்ளன.

தமிழகமாணவர்கள், அவர்கள் விருப்பத்திற்கேற்ற மொழியை கற்க அவர்களுக்கு உரிமையுள்ளது. தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், இந்திக்கு எதிராகபோராட்டம் நடத்தி வருகின்றனர் , ஆனால், அவர்களது கட்சி எம்.பி.க்களே இந்தி பயின்று வருவதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Leave a Reply