பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார். அப்போது மராட்டிய சட்ட சபை தேர்தல்குறித்து அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

பா.ஜ.க தேசிய தலைவராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்ட அமித்ஷா முதல் தடவையாக மராட்டிய மாநிலம் நாக்பூர் வந்தார். டெல்லியில் இருந்து விமானம்மூலம் நாக்பூர் வந்து சேர்ந்த அவரை விமான நிலையத்தில் மாநில பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மேல்சபை எதிர்கட்சி தலைவர் வினோத் தாவ்டே உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

அதன் பிறகு அமித்ஷா அங்கிருந்து மஹல் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் மற்றும் மூத்த தலைவர் பையாஜி ஜோஷி ஆகியோரை அவர் சந்தித்துபேசினார். அவர்களுக்கு இடையே ஆன இந்தசந்திப்பு சுமார் 1½ மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது மாநில பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பொதுசெயலாளர் ரவீந்திர பூஷாரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உடனிருந்தனர்.

Leave a Reply