வறுமையில்வாடும் மக்களுக்கு உதவும் விதத்தில் பிரதமரின் நிவாரண நிதியை பயன்படுத்த வேண்டும் என, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமரின் நிவாரண நிதியை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். குஜராத் மாநிலத்தைப் போன்று நிதியை ஆக்கப்பூர்வமாக செலவுசெய்ய வேண்டும் என்று, அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். குறிப்பாக ஏழைமக்கள், குழந்தைகள், அரசு மருத்துவமனை நோயாளிகள் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், உதவிக்கேட்டுவரும் விண்ணப்பங்கள் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும், அவசர நிலை அடிப்படையில் பயனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று மேலும் அவர் கேட்டுக்கொண்டார். பிரதமரின் நிவாரண நிதியைப் பெறத் தகுதி யுள்ளவர்களுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து முதலில் கடிதமும், பின்னர் எஸ்.எம்.எஸ் தகவலும் அனுப்பவேண்டும் என்று மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

Tags:

Leave a Reply