டில்லியில் ஆட்சி அமைக்க கேட்டுகொண்டால் நாங்கள் தயார் என்றும் அதேநேரத்தில் மறு தேர்தலுக்கும் பா.ஜ.க, தரப்பில் தயாராக உள்ளதாகவும் டில்லி பாஜக.,தலைவர் சதீஷ் உபாத்தியாயா கூறியுள்ளார்.

டில்லியில் ஜனாதிபதி ஆட்சி நடந்துவருகிறது. இங்கு அடுத்து என்ன அரசியல் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் டில்லி பாஜக. தலைவர் சதீஷ் உபாத்தியாயா, பாஜக., முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சமான ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய உபாத்தியாயா கூறுகையில், டில்லியில் ஆட்சிஅமைப்பது தொடர்பாக எதுவும் அமைச்சரிடம் பேசவில்லை. டில்லியில் எமசிடி. பணிகள் தொடர்பாக பேசினேன். ஆட்சிஅமைக்க எங்களுக்கு யாரும் அழைப்பு விடுக்க வில்லை. அழைத்தால் ஆட்சி அமைக்கதயார். மறுதேர்தலையும் சந்திக்க தயார். காங்கிரஸ், மற்றும் ஆம் ஆத்மியில் இருந்து உள்ள அதிருப்தி எமஎல்ஏ.,க்கள் தயவில் ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை. இவர்கள் விலகுவதுவரை எந்த முடிவும் நாங்கள் எடுக்கமுடியாது. டில்லியில் ஆட்சி அமைப்பதில் காலநிர்ணயம ஏதும் இல்லை. ஆட்சி அமைப்பது தொடர்பான அனைத்து சூழல்களும் கவனத்தில் கொள்ளப்படும் . நன்றாக ஆலோசித்து முடிவு எடுப்போம். என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply