மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை குறு, சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்துவாங்கி அதன் மூலம் அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் அதிகளவில் வேலை வாய்ப்புகளை குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தான் வழங்கி வருகிறது. இந்நிலையில், குறு, சிறு தொழில்நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை மிகப் பெரிய தனியார் நிறுவனங்கள் தயாரித்து அவற்றை மலிவான விலைக்கு விற்று சந்தையில் முன்னணியில் நிற்கிறது. இந்த நிறுவனங்களுடன் குறு, சிறுதொழில் நிறுவனங்களால் போட்டி போட முடியவில்லை. மேலும், இந்த தொழில் நிறுவனங்களை நம்பியுள்ள கோடிக் கணக்கானவர்களும் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு இந்த நிறுவனங்களை நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு தேவைப்படும் பொருட்களை 20 சதவீதம் அளவிற்கு குறு, சிறு நிறுவனங்களில் இருந்து கட்டாயமாக வாங்கி பயன்படுத்தவேண்டும்.

அந்த நிறுவனங்களின் சேவைகளையும் பெறவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக அடுத்ததாண்டு ஏப்ரல் முதல் கட்டாயமாக 20 சதவீத பொருட்களை குறு, சிறு தொழில் நிறுவனங்களில் வாங்கவேண்டும் என்று மத்திய குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

 

Tags:

Leave a Reply