ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் முக்கால் நிர்வாணத்தில் நாகரிகமற்று இருந்தபொழுது வேட்டிகளும் அங்கவஷ்திரங்களும் அணிந்து நாகரிக பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் நாம். ஆனால் இன்றோ தாய் மண்ணிலேயே வேட்டி கட்டுவது அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. சில கிளப்புகளும் , நச்சத்திர ஹோட்டல்களும் வேட்டி கட்டியவர்களை உள்ளே விடவே மறுக்கிறது.

சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்ககிளப்பில் நடைபெற்ற புத்தகவெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரந்தாமன், மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தி உள்ளிட்டோர் வேட்டி கட்டி வந்தனர் என்ற ஒரே காரணத்திற்க்காக அவர்களை உள்ளே விடாமல் அவமதித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் மட்டுமின்றி, ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், போட் கிளப், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிளப்களில் வேட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வேட்டி அணிந்து செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனுமதி கிடையாது என்று சட்டங்களே இயற்றியுள்ளனர்.

ஆங்கிலேயனின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு 65ந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் இன்னும் நாம் அவனது அநாகரிக எச்சங்களில் இருந்து விடுபடவில்லையே?. தாய் மண்ணிலேயே அதன் கலாச்சார அடையாளங்களை புறக்கணிக்கும் இதைப்போன்ற கிளப்புகள் தேவைதானா?.

மூடிய அரங்கத்துக்குள் மிகவும் நாகரிகமாக கோட் சூட் அணிந்து வரவேண்டும் என்று ஆடை கட்டுப்பாடுகளை (dress code) விதிக்கும் இந்த கிரிக்கெட் கிளப்புகள். கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் அரை குறை ஆடைகளுடன் பெண்களை ஆட அனுமதிப்பது மட்டும் ஏனோ?.

ஆடை வடிவில் மண்ணின் கலாச்சாரத்தை புறக்கணிப்பதால் பெரிதாக யாரும் கோட்டு சூட்டுக்கு மாறிவிடப்போவதில்லை. அதேநேரத்தில் விளையாட்டு வடிவத்தில் கிரிக்கெட்டை அந்நிய விளையாட்டு என்று மண்ணின் மைந்தர்கள் அனைவரும் புறக்கணித்தார்கள் என்றால் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்கும் தாய் மண்ணில் பிறந்து அன்னியவான்கள் எல்லாம் வேஸ்ட்டி எண்ண கோவணத்துக்கு கூட மாற தயங்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply