கர்நாடகத்து அணைகள் அனைத்தும் நிறம்பி வழிகின்றன. திறந்துவிடப்ப்ட்ட உபரி நீர் மட்டும் இன்றய நிலவரப்படி வினாடிக்கு 40,000 அன அடி நீர் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அதேவேளையில் தமிழகத்தின் பல பகுதிகள் வரட்சியின் பிடியில் இருந்து இன்னும் மீளவே இல்லை….

சில இடங்களில் மக்கள் குடி நீருக்கே அவதியுற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அதிவிரைவில் ,இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 91 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது….

அப்போது தமிழக அரசு வேறு வழி இல்லாமல் மேட்டூர் அணையை திறந்து விடும். அப்போது வழக்கமான பயன்பாடுபோக எஞ்சிய உபரி நீர் வீணாக கடலில் கலக்கும் ….

தமிழகத்தில் வழக்கமான பருவமழைக்காலம் துவங்கப்படுவதற்கு முன்பே இந்த நிலை என்றால் இந்த வருட மழைக்காலம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத்தரும் என்பது ஆனந்தத்தின் எல்லை என கூறலாம் ….

எனினும் கூட 1967ல் இருந்து இன்றுவரை தமிழகத்தை திமுக, அதிமுக ஆகிய இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

பல நீர்த்தேக்கங்கள் தமிழகத்தில் பெயரளவில் இருந்தாலும், நிரம்பி வழிந்ததாக சரித்திரமே இல்லை..

அனேகமாக அனைத்து குளங்களும் தூர் வாறப்படாமல், ஆகாயத்தாமரை செடிகளும், கருவேல மரங்களாலும் சூழப்பட்டு , பாழ் பட்டு கிடக்கின்றது.

தமிழ், தமிழ் என்று வாய் கிழிய கத்தும் மாநிலக்கட்சிகள் விவசாயிகளின் ஜீவாதாரப்பிரச்சனையாகவும், பொதுமக்களுக்கு வாழ்வாதாரப்பிரச்சனையாகவும் இருக்கும் நதி நீர் விஷயத்தில் வாய் மூடி மெளனம் காத்தே வருகின்றது.

செழிப்பான அணைகளை இணைத்து, வரண்ட அணைகளுக்கு நீர் வரத்து ஆதாரங்களைப்பெருக்க இதுவரை இரண்டு கழகங்களும் என்ன செய்தது ?

1967 முதல் இன்றுவரை வெள்ளை அறிக்கையை தமிழக அரசிடமிருந்து ," மத்திய நீர் வளத்துறை " கேட்டுப்பெறவேண்டும்.

அப்போதுதான் இவர்களின் போலி அரசியல் வெளிச்சத்துக்கு வரும்.

Leave a Reply