இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலனுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

கோவைமாவட்ட இந்துமுன்னணி சார்பில், ஆலயதரிசன கட்டணத்தை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலன் கலந்துகொண்ட பின்னர், கோவை கணபதியில் உள்ள இந்துமுன்னணி பிரமுகர் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று பகல் 2 மணியளவில் அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர், உடனடியாக கோவை ஆவாரம் பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராமகோபாலன் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

ராமகோபாலனுக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடல் நலம் ஓரளவு தேறியதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைபிரிவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு சிலநாட்கள் தங்கி இருந்து சிகிச்சைபெறுமாறு டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர்.

89 வயதான ராமகோபாலன், மருத்துவசிகிச்சைக்கு பின்னர் நலமுடன் இருப்பதாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply