ராணுவத் தலைமை தளபதி பிக்ரம்சிங் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவுபெறுகிறது. அவர் ஓய்வு பெறுவதையொட்டி இம்மாதம் 26ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு பிரியாவிடை விருந்து தருகிறார்.

இந்தநிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் அனைத்து துறைகளின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

ஆண்டுதோறும் ஜூலை 26ம்தேதி நடக்கும் கார்கில் விஜய்திவஸ் விழாவிற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முக்கியத்துவம் குறைந்து காணப்பட்டது.

இந்த ஆண்டு பாஜக அரசு பதவியேற்றுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:

Leave a Reply