அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டது குறித்து இன்று பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ”ஆசியாவின் கிழக்கிலிருந்து மேற்குவரை அனைத்து நட்பு நாடுகளின் உறவுகளையும் வளர்ப்பதில் இந்தியா அதிகமுக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், மோடி தலைமையில் புதிய அரசு இந்தவிஷயத்தில் மிகவும் உன்னிப்பாகவும், கவனமாகவும் செயல்பட்டு வருவதாகவும்” கூறினார்.

6வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர்மோடி அறிக்கை வெளியிட்டது குறித்த காங்கிரஸ் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த சுஷ்மாசுவராஜ், ”காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் இதுவரை 5 பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், ஒருதடவை கூட அறிக்கை அளித்தது கிடையாது.

பிரிக்ஸ் மாநாட்டில் அறிக்கை அளித்தே ஆகவேண்டும் என்று எந்த சம்பிரதாயமும் கிடையாது. ஆனால், பிரதமர் மோடி அவர்கள் சர்வதேச ஆட்சிமுறை மற்றும் மண்டல நெருக்கடிகள் குறித்து விரிவான அறிக்கையையும் கோரிக்கையையும் முன்வைத்தார். இதன் மூலம் பிரிக்ஸ் மாநாட்டில் ஒரு புதிய சம்பிரதாயத்தையே உருவாக்கி விட்டோம்” என்றார்.

Leave a Reply