தமிழகத்தில் “அனைவருக்கும் கல்வித்திட்டம்’ (சர்வ சிக்ஷா அபியான்) சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பாராட்டு தெரிவித்தார்.

மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது அளித்த பதிலில், “இந்தியாவிலேயே கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் அனைவருக்கும் கல்விதிட்டம் சிறப்பாக செயல்படுத்தப் படுகிறது. இதற்காக, தமிழக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் அங்கீகரிக்கிறது. இதற்காக தமிழக, கேரள அரசுகளுக்கு மத்திய அரசு நன்றி தெரிவித்துக்கொள்கிறது’ என்று தெரிவித்தார்.

Leave a Reply