பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கைவரலாறு அடங்கிய நூல் ஒன்றை, பா.ஜ.க எம்.பி.யும், பத்திரிகை யாளருமான தருண்விஜய் சீன மொழியில் எழுதியுள்ளார். ‘மோடி–ஒரு நட்சத்திரத்தின் நம்ப முடியாத தோற்றம்’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்நூலை, சீனாவின் சிச்சுவான் பல்கலைக் கழகத்தின் தெற்கு ஆசிய கல்விமையம் வெளியிட்டுள்ளது.

இந்நூலுக்காக மோடி எழுதியுள்ள உரையில், ‘இந்தியாவில் தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை சீன நண்பர்கள் அறிந்துகொள்ள இந்நூல் உதவும்’ என நம்புவதாக கூறியுள்ளார். மேலும் இந்த நூல், சம கால இந்தியாவின் வாசலாகவும், புரிந்துணர்வு மற்றும் தோழமைக்கு திறவு கோலாகவும் அமையும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply