வட மாநிலங்களை சேர்ந்த பாஜக எம்.பி.க்களை சந்தித்த பிரதமர் நரேந்திரமோடி, தனது அரசு எடுக்கும் துணிச்சலான நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். .

அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த பாஜக எம்பி.க்களை நரேந்திரமோடி, தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இவ்வாறு வடமாநில எம்.பி.க்களை மட்டும் பிரதமர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் பேசுகையில், தனது தலைமையிலான மத்திய அரசு கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது, அதன் காரணமாக நாட்டின் எதிர்காலத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்த முடிவுகள் தொடர்பாக மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறவேண்டும் என்றார். இதனை தொடர்ந்து பா.ஜ.க.,வின் மற்றமாநில எம்.பி.க்களையும் பிரதமர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply