லோக்சபாவில் எதிர்க் கட்சி தலைவர் பதவியை கோர காங்கிரஸ்கட்சிக்குத் தகுதியில்லை என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி தெரிவித்துள்ளார்.

நடந்துமுடிந்த லோக்சபா பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 282 இடங்களில் பஜக. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்ததேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. இந்திய அரசியல்சட்டப்படி மொத்தமுள்ள தொகுதிகளில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து பெறமுடியும்.

இருப்பினும் எதிர்க் கட்சி பதவியை எங்களுக்கு தரவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சபாநாயகரை நேரில்சந்தித்தும், கடிதங்கள் மூலமும் வலியுறுத்தி வந்தனர். மேலும், எங்களுக்கு எதிர்க் கட்சி தலைவர் பதவி தராவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குதொடுப்போம் எனவும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

லோக்சபா சபா நாயகர் சுமித்ரா மகாஜன் இந்தசிக்கலான விஷயத்தில் சட்டநிபுணர்கள் மற்றும் அரசியல் சட்ட நிபுணர்களின் கருத்து கேட்டுதான் முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி அட்டார்னி ஜெனரல் முகுல்ரோஹட்கியின் கருத்தையும் அவர் கேட்டிருந்தார்.

அட்டார்னி ஜெனரல் தனதுகருத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு அனுப்பினார். அதில், 543 எம்.பி.க்களை கொண்ட லோக் சபாவில் 10 சதவீதமான 55 எம்.பி.க்கள் இல்லாததால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைகோரும் தகுதி இல்லை. எந்த உதாரணமும் இல்லை 10 சதவீத இடங்களை பெறாத ஒருகட்சிக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கியதாக முதல் லோக்சபா ஜி.வி.மவ்லாங்கர் சபாநாயகராக இருந்தது முதல் இதுவரை எந்த முன்னு தாரணங்களும் இல்லை.

ராஜீவ் காந்தி காலத்தில்கூட காங்கிரஸ் 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றிருந்தாலும், தெலுங்குதேசம் கட்சிக்கு இதே காரணத்துக்காக எதிர்க் கட்சித் தலைவர் பதவிவழங்க மறுத்துவிட்டது என்று அட்டார்னி ஜெனரல் கூறியிருக்கிறார். ஐ.மு. கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 60 எம்.பி.க்கள் இருப்பதாக கூறினாலும் இதற்கும் எந்த முன்னுதாரணமும் இல்லை என்று கூறி காங்கிரசின் கோரிக்கையை அட்டார்னி ஜெனரல் நிராகரித்து விட்டார்.

Tags:

Leave a Reply