கார்கில் நினைவுதினத்தை ஒட்டி, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும், அவர்களது தைரியத்தையும், தியாகத்தையும் போற்றுவதாகவும் பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கார்கில் நினைவுதினத்தின் 15-வது ஆண்டுவிழா அனுசரிக்கப்படுகிறது. 1999-ல் ஜூலை 26-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில்போரில் இந்தியா வெற்றிபெற்றது.

அன்று முதல், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 கார்கில் நினைவுதினமாக அனுசரிக்கப்படுகிறது. 15வது கார்கில் நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திரமோடி, உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.

இதனையொட்டி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “தியாகிகளுக்கு வீரவணக்கம். அவர்களது தைரியத்தையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply