இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான முக்கியத்து வத்தை அதிகரிக்க நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ராணுவத்தில் மேற்கொள்ளப்பட உள்ள முக்கிய நடவடிக்கையாக இது இருக்கும் இது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை மத்திய அரச, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, 2015-16ஆம் ஆண்டுகளில் இருந்து விமான படையிலும், பொறியாளர் பிரிவிலும் முக்கிய பொறுப்புகளுக்கு பெண்களை நியமிக்க அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கென உடல்தேர்வில் பெண் அதிகாரிகளுக்கு சிலசலுகைகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

அதே நேரத்தில் நியமிக்கப்படும் பதவிகளில் ஆண் பணியாளர்களுக்கு நிகரான அதிகாரம் பெண் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், எதிரிகள்மீது தாக்குதல் நடத்துவது, சண்டையிடுவதற்கான உத்தரவை வீரர்களுக்குபிறப்பிப்பது ஆகிய பணிகளில் பெண்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் மருத்துவம், சட்டம், பொருட்களை அனுப்பும்பிரிவு ஆகியவற்றில் மட்டுமே பெண்கள் பணிபுரிய தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply