மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா ஆர்வமாக உள்ளார் என்று வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

நரேந்திரமோடி, செப்டம்பர் மாதம் அமெரிக்காசெல்கிறார். அவர் ஒபாமாவை சந்திக்கும் தேதி, இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், செப்டம்பர் 30ந் தேதி இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.

இந்நிலையில், இச்சந்திப்பு குறித்து வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது:–

அமெரிக்கா–இந்தியா இடையிலான ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவை வலுப்படுத்தவும், இரு தரப்பு உறவை பலப்படுத்தவும் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா ஆர்வமாக உள்ளார்.

என்று அவர் கூறினார்.

ஒபாமா–நரேந்திரமோடி சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுக்கு அடித்தளம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், அமெரிக்க–இந்திய உறவு சிறப்பாகஇருந்ததாக அமெரிக்க அரசு அதிகாரிகள் உட்ப்பட பலர் இன்றும் நினைவு கூர்கிறார்கள். வாஜ்பாய் ஆட்சிக் காலம், இருநாட்டு உறவில் ஒரு பொற்காலம் என்று அவர்கள் வர்ணிக்கிறார்கள். அந்த பொற்காலத்தை மீண்டும் புதுப்பிக்க அவர்கள் விரும்புகிறார்கள்.

Leave a Reply