ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று ரம்ஜான்பண்டிகை கொண்டாடலாம் என தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஈகைத் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடந்த ஒருமாத காலமாக உண்ணா நோன்பை கடைப்பிடித்தனர். புனிதமாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள், அடுத்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில், ஏழைஎளியவர்களுக்கு உதவிசெய்வதுடன் ஈகைப் பெருநாளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

Tags:

Leave a Reply