உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த கலவரம் வன்முறைக்கு மாநில அரசே முழுபொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது .

பாஜகவை சேர்ந்த ஷாநவாஸ் ஹூசைன் செய்தியாளர்களிடம் இது குறித்து கூறுகையில்,

கலவரத்துக்கு மாநில அரசே முழுபொறுப்பேற்க வேண்டும். அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது. வாக்குவங்கி அரசியலுக்காக ஆட்சியாளர்களே மத ரீதியான பதட்ட நிலை இருப்பதை விரும்புவது போலிருக்கிறது. பாஜக அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகிறது. அனைவரும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்பவழிபாடு செய்ய உரிமை உள்ளது. அதில்யாரும் குறுக்கிட முடியாது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான மாநில அரசு எல்லா தரப்பிலும் பலவீன மடைந்துள்ளது. மாநிலத்தில் அரசு நிர்வாகம் அறவே செயல் படவில்லை என்று ஷாநவாஸ் ஹூசேன் கூறினார்.

Leave a Reply