அரியானா காங்கிரஸ் தலைவர் சவ்தரி பிரேந்தர்சிங்,நேற்று பாஜக., தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.முன்னதாக கடந்தமாதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை குஜராத்பவனில் சந்தித்த பின் தற்போது அமித்ஷாவை சந்தித்து இருப்பதால் அவர் பாஜக.,வில் இணைவார் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் மாநில அரசியலில் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா தலைமையிலான அரசின் மீதான அதிருப்த்தியையும் ஒரு காரணமாக கூறலாம். முன்னதாக அரியானா அமைச்சரவையிலிருந்து மாநில மின்துறை அமைச்சர் அஜய் யாதவ்,மாநில முதல்வரை கடுமையாக விமர்சித்து விட்டு தனது ராஜினாமா செய்துவிட்டார். மேலும் அரியானா மாநிலத்தில் லோக் சாபா தேர்தலில் பாஜக.,7 இடத்திலும் ஆளும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது.

மகாராஷ்டிராவிலும் அரியானா மாநிலத்திலும் இனி காங்கிரஸ் மீள்வதுகடினமே.இத்ததைய சூழ்நிலையில் பிரேந்தர்சிங், அமித்ஷாவை சந்தித்து இருப்பதால் அவர் பாஜக.,வில் இணைவார் என தெரிகிறது.

Tags:

Leave a Reply