பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் எவ்வளவு நெருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்கு, மத்திய அரசு புதிய கட்டுப் பாடுகளை விதித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மிகநெருக்கமாக அவரது பாதுகாவலர்கள் அனுமதிக்கப் பட்டதால், பல முக்கிய தகவல்கள் பல்வேறு தரப்பினருக்கும் சென்றுசேர்ந்தது என்றும், அதற்கு பாதுகாவலர்களை மிகநெருக்கமாக அனுமதித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

இதைதொடர்ந்து முக்கிய நபர்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாவலர்கள் தள்ளியே இருக்கவேண்டும் என்றும், மிக அதிகமான கூட்டம் மற்றும் பொதுக் கூட்டங்கள் இவைகளுக்கு இடையில் மோடி உரையாற்றும் போது, பாதுகாவலர்கள் மோடிக்கு மிகநெருக்கமாக இருந்து பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், பாதுகாவலர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply