பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அக்கட்சியின் புதியதலைவராக அமித் ஷா இம்மாதம் 9-ம் நியமிக்கப்பட்டார்.

இவரது நியமனத்துக்கு கட்சியின் உயர் மட்ட அதிகாரம் படைத்த பாராளுமனறக்குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், பா.ஜ.க.வின் சட்டதிட்டங்களின்படி இந்த நியமனத்துக்கு ஒப்புதல்பெறுவதற்காக கட்சியின் மேலிட தலைவர்களை உள்ளடக்கிய பா.ஜ.க.வின் தேசியகுழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி புதுடெல்லியில் கூடுகிறது.

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் இந்தகூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக. மூத்த தலைவர் எல்கே.அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து கட்சியின் தேசியகுழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply