பெண்களுக்கு அதிகாரம் தரும் வகையில், அவர்களுக்கான பிரத்யேகவங்கி, நாடுமுழுவதும் துவங்கப்படும். இந்தவங்கி, கடந்தாண்டு துவங்கப்பட்ட, ‘பாரதிய மகிளா வங்கி’யுடன் இணைந்து செயல்படும்,” என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.

இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது: பெண்களுக்கு சுய அதிகாரம் தரும் வகையிலும், அவர்களுக்கான நிதி தேவைகளுக்கு உதவும் வகையிலும், பெண்களுக்கென பிரத்யேக வங்கிசேவை துவங்கப்படவுள்ளது. நாடுமுழுவதும் இதன்கிளைகள் அமைக்கப்படும். 1993ல், துவங்கப்பட்ட, ‘ராஷ்டிரிய மகிளாகோஷ்’ கடந்தாண்டு துவங்கப்பட்ட, ‘பாரதிய மகிளாவங்கி’ ஆகியவற்றுடன், இந்தவங்கி இணைந்து செயல்படும். பெண்களுக்கான வங்கி சேவையை, ஒரேகூரையின் கீழ் கொண்டுவரும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தவங்கிகள் அனைத்தும், ‘பெண்கள் வங்கி’ என, அழைக்கப்படும்.இதுதொடர்பாக, முக்கிய வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் விரைவில் பேச்சு நடத்தப்படும். என்று அவர் கூறினார்.

Leave a Reply