வாக்காளர்களிடம் நெருங்கிச் செல்லுங்கள் என்று பாஜக எம்.பி.க்களை கட்சியின் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

பா.ஜ.க.,வின் அகில இந்திய தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முதலாக நேற்று பாராளுமன்ற மையமண்டபத்தில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவை எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்ப்£து எம்.பி.க்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர். விரைவில் 4 மாநிலங்களுக்கு சட்ட சபை தேர்தல் நடைபெற இருப்பதால், அதை கருத்தில்கொண்டு வாக்காளர்களிடம் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்ளுமாறு கூட்டத்தில் பேசி அமித்ஷா எம்.பி.க்களை கேட்டுக் கொண்டார்.

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு (பாஜக அரசு) தனிமெஜாரிட்டியுடன் அமைந்து இருக்கிறது. விரைவில் 4 மாநில சட்ட சபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். இது அவர்களுடைய கடமை ஆகும். மற்ற மாநிலங்களைச்சேர்ந்த எம்.பி.க்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பணியாற்றவேண்டும்.

மக்களுடன் தொடர்பு வைத்து கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். மக்களுடன் கலந்துரையாடுவது, ஒருங்கிணைந்து செயல் படுவது போன்றவற்றில் நீங்கள் ஆர்வத்துடன் செயல்படவேண்டும். இதற்காக ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதியில் அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும். ‘பூத்’ கமிட்டி அமைத்து கட்சியின்வெற்றிக்காக எப்போதும் பாடுபடுங்கள்.

மக்கள் உங்கள்மீது மிகப் பெரிய பொறுப்பை சுமத்தி இருக்கிறார்கள். எனவே அவர்களுக்காக பாடுபடுங்கள். எம்.பி.க்களின் தொகுதிமேம்பாட்டு நிதியை ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும்
என்று கூறினார்

Leave a Reply