நாடெங்கும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்படும் என மத்திய இரசாயனத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்த்துள்ளார் .

இது குறித்து அனந்த்குமார் மேலும் கூறியதாவது : பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் புதிய எதிர் காலத்தை நோக்கி இந்தியா நடைபோட்டு வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சிப்பாதையில் இந்தியா பயணிக்கும். இதில் அரசியல் எதுவுமில்லை . ஏழை,எளியமக்கள் பயன்பெறும் பல்வேறு வகையான நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்களை அமல்படுத்த மோடி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மலிவு விலை மருந்துகள் விற்பனைக்கு கிடைக்கும் மக்கள் மருந்தகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply