நேபாளத்தில் இரண்டுநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, அங்கு மிகவும் எளிமையான சைவ உணவையே உட்கொண்டார்.

“ரொட்டி, பருப்பு மற்றும் காய் கறிகள் போன்ற எளிமையான சைவ உணவையே விரும்பி எடுத்து கொள்கிறார்” என்று ஒரு சமையல்காரர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

காலை உணவின் போது மசாலா தேநீரும், எலுமிச்சை சாறும் எடுத்துக் கொண்டார். தேவையான பழங்கள், காய்கறிகள் அனைத்துமே நேபாளத்திலேயே கிடைக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தியத்தூதர் ரஞ்சித்ரே அளிக்கும் வரவேற்பு விழாவில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு, அந்நாட்டு பிரதமர் சுஷீல்கொய்ராலா ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் அளிக்கும் இரவுவிருந்தில் கலந்துகொள்கிறார்.

Leave a Reply