·2 நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அங்குள்ள பழமைவாய்ந்த பசுபதிநாத் ஆலயத்தில் வழிபாடுசெய்தார்.

ஆலய நிர்வாக கமிட்டி மற்றும் அர்ச்சகர்களின் சார்பில் அவருக்கு பூரணகும்ப மரியாதை தரப்பட்டது . கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன் காவி உடை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி, பசுபதி நாதரை சில நிமிடங்கள் அமைதியாக வணங்கி வழிபாடுசெய்தார்.

பிறகு, இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 2,500 கிலோ எடையுள்ள சுத்தமான சந்தன கட்டைகளை கோயிலுக்கு மோடி தானமாக வழங்கினார்.

கோயிலில் உள்ள சிவ லிங்கத்துக்கு தினமும் அரை கிலோ சந்தனம் தேவைப் படும் நிலையில், மோடி வழங்கியுள்ள சந்தன கட்டைகளால், கோயில் நிர்வாகத்துக்கு மிகப் பெரிய கவலை தீர்ந்ததாக மோடியிடம் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply