மோடியின் உரை தங்களது இதயங்களை தொட்டதாகவும் இதைப்போன்று இதுவரை எந்த அரசியல் தலைவரும் பேசியதில்லை என்றும் நேபாள அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது இரண்டுநாள் நேபாள பயணத்தை திங்கள்கிழமை நிறைவுசெய்தார். இந்தப் பயணத்தையொட்டி, நேபாளத்தில் முக்கியமான சாலைகள் அமைப்பதில் உதவுவது, எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பது என்று இந்தியா முடிவுசெய்துள்ளது.

மோடியின் பயணம்குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் சையது அக்பருதீன் கூறுகையில், “”நேபாள அரசியல் நிர்ணயச்சபையில் பிரதமர் மோடியின் உரை தங்களது இதயங்களையும் மனதையும் தொட்டதாக அந்நாட்டைச்சேர்ந்த பல்வேறு தலைவர்களும் அவரிடம் தெரிவித்தனர்.

இந்தப்பயணம் வரலாற்று சிறப்புமிக்கது என்று நேபாளத் தலைவர்கள் வர்ணித்தனர். மோடி பேசியதைப்போல் இந்தியாவைச் சேர்ந்த வேறு எந்தத்தலைவரும் இதுவரை பேசி தாங்கள் கேட்டதில்லை என்று கூறினர்” என்றார்.

“இந்தியாவுடனான 1950ம் ஆண்டைய நட்புறவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என நேபாளம் கோரி வருகிறது. இதுகுறித்து மோடி கூறுகையில், இந்த கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்பதாக அந்நாட்டுத் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்’ என்றும் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

Leave a Reply