குஜராத் அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்த சிஏஜி அறிக்கை ஒரு வழக்கமான நடைமுறைதான். அதன் கருத்துக்களை திரித்து அரசியல் சர்ச்சைகள் உண்டாக்க முயல்வது சிறுபிள்ளைத்தனமாகும்.

நரேந்திர மோதி அவர்கள் டெல்லியில் பிரதமராக பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், டெல்லி ஊடகங்கள் தம் 2014க்கு முந்தைய நிலைக்குத்திரும்பி, குஜராத் பற்றி எத்தகைய செய்தி வந்தாலும், ஊதிப்பெரிதாக்கி, திரித்து அதிலிருந்து சர்ச்சைகளை கிளப்பிவிடுகின்றன. அந்தப்பட்டியலில் சமீபத்திய சேர்க்கை, குஜராத் அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்த சிஏஜியின் தணிக்கை அறிக்கை. குஜராத் அரசின் செயல்திறன் பற்றி சிஏஜி கண்டறிந்தவைகளை மூடிமறைக்கும் விதத்தில் டெல்லி ஊடகங்கள், அரசியல் திரிபுகளை ஏற்படுத்தும் நொண்டி முயற்சிகளில் ஈடுபடுவது வியப்பளிக்கிறது.

குஜராத் அரசின் செயல்திறன் குறித்து சிஏஜி கண்டறிந்தவை

2008-2009 லிருந்து 2012-2013 வரை இடைப்பட்ட ஆண்டுகளில் மாநில அரசின் வரி வருவாய் 128.9% கூடியுள்ளதாய் சிஏஜி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனுடன் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் பற்றும் கடந்த ஆண்டை விட 19.49% உயர்ந்துள்ளது. சொந்த உள்நாட்டு பொருட்கள் உற்பத்தி (GSDP) அளவில் 3 சதவீதத்திற்கு மேல் நிதிப்பற்றாக்குறை தாண்டக்கூடாது எனும் இலக்கை, குஜராத் அரசு 2.37% என்ற அளவுக்குள்ளேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டது.

குஜராத அரசின் செயல்பாடு முன்னோக்கி உள்ளதாக, சிஏஜியின்‌ முக்கிய கண்டறிந்தல்களாவன:

» வருவாய்: குஜராத் மாநில அரசின் மொத்த வருவாய்ப்பற்று 2011-2012 ஆண்டில் ரூ. 62,958.99 கோடியாக இருந்தது, 2012-2013 ஆண்டில் ரூ.75,228.53 கோடியாக உயர்ந்துள்ளது.

மாநிலத்தின் வருவாய்ப்பற்று 2008-2009 ஆண்டிலிருந்து நிலையாக வளர்ந்து கடந்த ஆண்டைவிட 19.49% அதிகரித்துள்ளது. மாநிலத்தின் வரி வருவாய் 2008-2009 ஆண்டிலிருந்து 128.79% உயர்ந்துள்ளது.

» வரி வருவாய்: வருவாய்ப்பற்றின் வரிப்பற்று 2008-09 ஆண்டின் 60.91 சதவீதத்திலிருந்து 2012-13ம் ஆண்டில் 71.64 சதவீதமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. மொத்த வருவாய் செலவீனம் கடந்த ஆண்டைவிட 16.59% உயர்ந்துள்ளது.

» பற்றாக்குறை மற்றும் உபரி: 2008-11 காலகட்டத்தில் வருவாய் பற்றாக்குறையில் இருந்த மாநிலம், 2011-12 மற்றும் 2012-13 நிதியாண்டுகளில் வருவாய் உபரி மாநிலமாய் மாறியது. 2012-13 நிதியாண்டில் ரூ.5,570 கோடி வருவாய் உபரியாக பெற்றிருந்தது. இது மேம்படுத்தப்பட்ட வருவாய்ப்பற்றாலும் ஆரோக்கியமான வரி விதிப்பு முறைகளினாலும், கடந்த ஆண்டைவிட ரூ.2,355 கோடி அதிகமாகும்.

» (VAT) வாட் வசூல்: தேசிய சராசரியை ஒப்பிட்டால், குஜராத் வாட் வசூலில் குரிப்பிடத்தக்க அளவு குறைவேயாகும். மேலும் கடந்த ஆண்டுகளைவிட குறைவான அளவே வாட் வசூலிக்கப்பட்டுள்ளது.

» (PSUs) பொதுத்துறை நிறுவனங்கள் ஈட்டும் லாபம்: 2012-13ம் ஆண்டில் பணியிலிலுள்ள மொத்தம் 69 பொதுத்துறை நிறுவனங்களில், 42 நிறுவனங்கள் ரூ.4,468 கோடி லாபம் ஈட்டியுள்ளன.

சிஏஜி‌யின் குஜராத் விமர்சனமும் – நம் விளக்கங்களும்

குஜராத் கடல்சார் வாரியத்தின் செயல்பாடுகளில், சிஏஜி அறிக்கை, சில தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளது. குஜராத் ஆண்டிபயாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு சலுகை அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் உண்மை நிலவரம் என்னவென்றால், குஜராத் கடல்சார் வாரியம், அந்த நிறுவனம் செலுத்தவேண்டிய பாக்கித்தொகையான ரூ.118 கோடியை வசூலிக்கும்முன் சில தொழில்நுட்ப விளக்கங்களை அரசிடம் கேட்டு காத்திருக்கிறது

ரிலயன்ஸ் பெட்ரோலியம் விவகாரத்தில் கூறப்படும் வருவாய் இழப்பு குற்றச்சாட்டில் உண்மை நிலவரம்: ரூ.649.30 கோடி பணம் உத்தேசமானதும், முடக்கப்பட்டதுமானதும் தானே தவிர, சிஏஜி கருதுவது போல வருவாய் இழப்பாக கொள்ள முடியாது.

சிஏஜியின் கருத்தான, சூரிய மின்சக்தியின் விலையும், அதனால் நுகர்வோருக்கு ஏற்பட்ட சுமை விஷயத்தில், GUVNL உடனான உடன்படிக்கை புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில், அரசின் எல்லா மட்டங்களுக்கும் வழிகாட்டப்பட்டதின் ஒரு அங்கம் என்றுதான் கருதவேண்டும். குஜராத்தின் இயற்கை வளங்கள் வரையறுக்கப்பட்ட அளவே உள்ளது; அதிகபட்ச அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளையும் புதுப்பிக்கப்பட முடியாத எரிசக்திகளையுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது; மேலும் அவற்றை

வெகுதூரத்திலிருந்தே தருவிக்கவேண்டியுள்ளது. அதனால் பாதுகாப்பான மின்சக்தி இலக்கை அடைய, சூரிய மின்சக்தியை கூடுமான அளவுக்கு பயன்படுத்திக்கொள்ளும் குஜராத்தின் விருப்பம் புரிந்து கொள்ளக்கூடியதே. சூரிய மின்சக்தியின் விலையும், அதனால் நுகர்வோருக்கு ஏற்பட்ட சுமை விஷயத்தில், நிர்ணயிக்கப்பட்ட விகித்தாச்சார கட்டணங்களை கவனத்தில் கொள்ளாமல், சிஏஜி குறுகிய நோக்கில் பார்த்துள்ளது.

GSPC வாயு நிறுவனம், தொழில் நுகர்வோர்களுடன் கொண்ட உடன்படிக்கை ஒப்பந்த விதிகளில் கூறப்பட்டுள்ளவாறு எரிவாயு விற்பனை விலையை மறுவரையறை செய்யவில்லை. அதன் பலனாக ரூ.25.37 கோடி வருவாய் பாதிக்கப்பட்டது என்றும் சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உண்மையில் இதை பாராட்டத்தான் வேண்டும். GSPC வாயு போன்ற வியாபார நிறுவனங்கள், தன் குறுகிய கால லாபம் மற்றும் குஜராத் முழுமைக்குமான வாயுக்குழாய் பதிப்பு மற்றும் கட்டமைப்பு முதலீடுகள் போன்ற, நீண்டகால நோக்கையும் கவனத்தில் கொண்டு, எரிவாயுவின் சில்லறை விற்பனை விலையை மறுவரையறை செய்யவேண்டும். இது, வாடிக்கையாளர் தளத்தை தக்க வைத்துக்கொள்வதையும், அதே சமயம் லாபகரமாக இயங்குவதையும் உறுதி செய்கிறது. கொள்முதல் விலை அடிப்படையில் மட்டுமே, மாதாந்திர காலத்தில் சில்லறை விற்பனை விலையை நிர்ணயிக்க எதிர்பார்ப்பது அறிவுடமை ஆகாது. விற்பனை விலையை மறுவரையறை செய்யாததால்தான், உத்தேசித்த வருவாய் இழப்பு ரூ.25.37 கோடி ஏற்பட்டது என்பதை மேற்கண்ட கோணத்தில்தான் பார்க்கவேண்டும்.

குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனம் (GSPL) குறித்த ஆய்வில் சிஏஜி அறிக்கை சொல்வது: GSPL நிறுவனம் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்திற்கு, போக்குவரத்து கட்டணத்தில் ரூ.73.70 கோடி தள்ளுபடி செய்து சலுகை காட்டியது, அதே போல டாரண்ட் பவர் நிறுவனத்திற்கு ரூ.18.64 கோடி ஒப்பந்த அளவை குறைக்கும் விவேகமற்ற முடிவால் நிறுவனத்திற்கு ரூ.92.34 கோடி இழப்பு ஏற்பட்டது. GSPL குறித்த ஆய்வில் சிஏஜி குறிப்பிடும் இந்த இரு விஷயங்களிலும் உள்ள உண்மை என்னவென்றால்,GSPLன் முறையான நீண்டகால வியாபாரத்தை கருத்தில் கொண்டு எடைபோட வேண்டுமே தவிர, லாபமா நஷ்டமா என்றல்ல. எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்திற்கெதிரான போக்குவரத்து கட்டணத்தை முற்றிலும் தள்ளுபடி செய்துவிட்டு, ஏப்ரல் 2014க்கு பிறகு, வேறு ஒரு போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் சரக்குகளை இடம்மாற்றிக்கொண்டிருக்கலாம். .எஸ்ஸார் நிறுவனத்திற்கு கட்டணத்தை தள்ளுபடி செய்யாமல் ஓராண்டுக்கு நிறுத்தி வைத்ததன் மூலம் அந்த நிருவனத்தை ஒரு வாடிக்கையாளராக தக்க வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் வருவாய் ஈட்ட விரும்பியது என்பதை உணர முடிகிறது. டாரண்ட் பவர் நிறுவன விஷயத்தில், திடமான நடவடிக்கை எடுத்தால் அதன் பலனாக நுகர்வோருக்கு அளிக்கப்படும் மானியத்தை குறக்கவேண்டி வரலாம். இது GSPLன் நீண்டகால வியாபார நோக்கிலும் இது சீரழிவிற்கு வழிவகுக்கும். GSPLன் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், அதிக LNG விலை, நலிவான பொருளாதாரம் போன்ற காரணங்களினால் 100% எதிர்பார்த்து மொத்த வியாபாரத்தையும் இழப்பத்தை விட, 80% தேவையை கையாளும் வாடிக்கையாளரை கொண்டிருப்பது மிகவும் நல்லதே. தற்போதைய ஒப்பந்தங்களை இழக்கும் வியாபார அபாயம் மட்டுமின்றி எதிர்கால வாயு போக்குவரத்து வியாபார வாய்ப்புகளுக்கும் பங்கம் வரலாம். டாரண்ட் பவர் கணிசமான வருமானம் ஈட்டும் நிறுவனம் மட்டுமல்லாது, GSPLன் முக்கிய வாடிக்கையாரும் ஆகும். GSPLன் எதிர்கால வருவாய் பங்களிப்பிற்கும் சாத்தியமான டாரண்ட் பவர் நிறுவனத்தை வாடிக்கையாளராக தக்கவைத்துக்கொள்வது போன்ற காரணங்களே விளக்குகிறது, ஏன்? GSPL, டாரண்ட் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது என்பதை.

ஆக, ஒட்டுமொத்தமாக ஆராய்ந்தாள், குஜராத் அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்த சிஏஜி அறிக்கை, பாராட்டுக்களும் விமர்சனங்களும் கலந்த, ஒரு வழக்கமான நடைமுறைதான். இதில் திரித்து அரசியல் சர்ச்சை ஏற்படுத்தப்படுத்தும் முயற்சிகள் சிறுபிள்ளைத்தனமாகும்.

Leave a Reply