மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-சிவசேனா தலைமையிலான மகாயுதி கூட்டணியில் லோக் ஜன சக்தி கட்சி அங்கம்வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தபிறகு, மகாயுதி கூட்டணியிலும் லோக்ஜனசக்தி கட்சி இடம் பெற்றுள்ளது. எத்தனை இடங்கள் என்பது விஷய மில்லை. நாங்கள் போட்டியிட ஒருசீட் கூட கிடைக்கா விட்டாலும் எங்கள் கூட்டணி உடையாது. நாங்கள் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரிக்காக பிரச்சாரம் செய்வோம். அவர் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

பீகாரில் லாலுவும், நிதிஷ்குமாரும் தங்கள் அரசியல் தளத்தை இழந்துள்ளனர். இணைந்து களமிறங்கும் அவர்கள் இருவரும் சட்ட மன்ற இடைத்தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள் என்று  அவர் கூறினார்.

Leave a Reply