மக்களவை வரலாற்றில் முதல் முறையாக, தமிழில்கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழிலேயே பதில் தந்தார் மத்திய வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பிரதமர் மோடி அரசில் திருச்சியில் பிறந்து ஆந்திர மருமகளாக உள்ள நிர்மலா சீதாராமனும் அமைச்சராக உள்ளார் . இந்நிலையில், மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்விநேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடுமுழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், சீனாவில் தயாரிக்கப்படும் விலை குறைவான பட்டாசுகள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு விற்கப்படுவதில், உள்ளூரில் உற்பத்திபாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பல முறை கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்று தமிழில் கேட்டார். இதைத்தொடர்ந்து, இந்த கேள்விக்கு தமிழிலில் பதில் அளிக்க அனுமதிக்கும் படி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி கோரினார். சபாநாயகர் அதை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து தமிழில்பேசிய நிர்மலா சீதாராமன், ஜெயலலிதா எழுதியகடிதம் கிடைத்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply