முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜஸ்வந்த் சிங், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜஸ்வந்த்சிங் நேற்று இரவு எதிர்பாராத விதமாக தடுக்கிவிழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவ மனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர் தீவிரசிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் சிறப்பு பார்வையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவதரப்பு தகவல்கள் வெளியாகின.

ஐஸ்வந்த்சிங் மிகவும் ஆபத்தான நிலையிலே சிகிச்சைபெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைசுவாச துணையுடன் உள்ளார். அவரது உடல்நிலை மருத்துவகுழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் மருத்துவமனை சென்று ஐஸ்வந்த் சிங்கை பார்த்தனர். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார் உள்ளிட்டோர்  மருத்துவமனை சென்று பார்த்து அவரது உறவினர்களிடம் நலம் விசாரித்தார். ஜஸ்வந்த் சிங் மகனிடம் பிரதமர் நரேந்திரமோடி நலம் விசாரித்தார்.

Leave a Reply