பாஜக.,வில் மட்டும்தான் பூத் கமிட்டியில் வேலை பார்த்தவர்கூட தேசிய தலைவராக முடியும் , பாஜகவுக்கு இனிமேல் தோல்வியே கிடையாது என்று பாஜக.,வின் புதிய தேசிய தலைவர் அமித்ஷ தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த பாஜக தேசியசெயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, ராஜ்நாத் சிங், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ராஜ்நாத்சிங்கிடமிருந்து முறைப்படி கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொண்ட அமித்ஷா, அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது: தேர்தலின் போது டீவிற்ற ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று ஏழைமக்கள் நினைத்தார்கள். காரணம், மோடியை அவர்கள் தங்கள்குடும்பத்தில் ஒருவராக பார்த்தார்கள். இதனால் தான் நேரு குடும்பத்தாரிடமிருந்து நாட்டுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நான் பாஜக.,வில் பூத்கமிட்டி தொண்டராகத்தான் அரசியலை தொடங்கினேன். ஆனால் இன்று பாஜகவின் தேசிய தலைவராக்கப் பட்டுள்ளேன். பாஜக.,வில் மட்டுமே சாமானியர்களும், தகுதியால் உயர்ந்தநிலைக்கு வர முடியும். பாஜகவால் மட்டுமே மோசமான நிர்வாகத்தை மீட்டு நல்லாட்சி தரமுடியும்.

நமக்கு அதிகப்படியான சீட்டுகளை வாரிவழங்கிய உத்தர பிரதேச மாநிலம் அமைதியின்றி காணப்படுகிறது. . அதை நீக்கவேண்டிய பொறுப்பு நமக்கு அதிகமாக உள்ளது. உத்தர பிரதேசமாநில அரசின் தோல்விகளையும், பீகாரில் நிதீஷ் குமார் ஆட்சியின் போது நிகழ்ந்த அவலங்களையும் வெளிச்சம்போட்டு காட்டவேண்டிய பணி பாஜகவுக்கு உள்ளது.

எக்காரணத்தை கொண்டும் ஏழைகள், விவசாயிகள் நலனைமட்டும் பாஜக அரசு விட்டுக் கொடுத்துவிட கூடாது. கட்சியை பலப்படுத்தா விட்டால் தொடர்ந்து ஆட்சியை பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்துள்ளேன். இனிமேல் பாஜகவுக்கு தோல்வி என்பதேகிடையாது. வருங்காலத்தில் வெற்றிமட்டுமே பாஜகவை வரவேற்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Leave a Reply