பாஜக வர இருக்கும் நாட்களில் இந்திய அரசியலில் ஒருபெரும் வடிவத்தை கொடுக்கும் கட்சியாக இருக்கும் என பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித் அத்வானி தெரிவித்துள்ளார்..

நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. ஏனெனில் கட்சியின் எந்த ஒரு தேசியசெயற்குழு கூட்டத்தையும் தவற விட்டதில்லை. பா.ஜ., வேறுபாடுகள் நிறைந்தகட்சி. லோக்சபா தேர்தலின் போது, கட்சியின் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் 272+ குறித்து பேசியபோது, சிலர் அதை கேலிசெய்தனர். ஆனால் இறுதியாக நாம் அதை சாதித்துள்ளோம். 2014 லோக்சபா தேர்தல் வெற்றிசரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. இந்த வெற்றியின் காரணமாக, கட்சியினர் யாரும் இறுமாப்புடன் இருந்துவிடக் கூடாது.

நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றது.தொண்டர்களிடம் தலைவர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அது எனக்குதெரியாது ஆனால் தலைவர்கள் தொண்டர்களிடம் அவர்கள் காட்டும் ஒற்றுமை மிகஅவசியம் என்று தெரிவித்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமித்ஷா விற்க்கும் பிரதமர் நரந்திரமோடிக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த பாஜக தேசிய செயற்குழுகூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் வரலாற்றில் மிகப் பெரிய சாகாப்தம் என்று அத்வானி தெரிவித்தார்.

Leave a Reply