இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு – மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக மீனர்களின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்களிடம் பத்து நாட்களில் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் மீனவர்களிடம் உறுதி அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் முயற்சியின் பயனாக,இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இலங்கை சிறையில் உள்ள 93 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர்.

Leave a Reply