மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது சுதந்திரத் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது . நமது அண்டை நாடு உறவுகள் சீர்படவும், உள்நாட்டு பொருளாதாரம், விவசாயம், விஞ்ஞானம், தொழில், வேலை வாய்ப்பு, கல்வித்துறைகள் மேம்படவும் மத்திய அரசு பொறுப்பேற்ற

நாளில் இருந்து முனைப்போடு செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில் மீனவர்கள் வாழ்வாதாரம், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண்பதில் அவசர அவசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டுமக்களின் நலனுக்கான நல்லாட்சி நடந்து வரும் இந்நாளில் நாடு சுதந்திரம்பெற தமது வாழ்நாளெல்லாம் உழைத்த அண்ணல் காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், நேதாஜி உள்ளிட்ட அனைத்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் மூவண்ண தேசியக்கொடி நிழலில் நின்று வீர வணக்கம் செலுத்துவோம்.

தேசமெங்கும் வன்முறை ஒழிந்து அமைதி மகிழ்ச்சி பெருகிடவும், அனவரிடையேயும் நல்லிணக்கம் மலர்ந்திடவும் வறுமை நீங்கி வளம்சிறந்திடவும் தமிழர் நலன் பெற்றிடவும் மீனவர் பிரச்னை தீர்ந்திடவும் ஒற்றுமை ஒருமைப்பாட்டு உணர்வோடு ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் சுதந்திர நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. என்று கூறியுள்ளார்.

Leave a Reply