தமிழக பாஜக.,வின் புதிய மாநில தலைவராக, தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கட்சித்தலைவர் அமித் ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழக பாஜகவுக்கு தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக நியமனம் ஆனதை தொடர்ந்து தமிழக பாஜக.,வுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் தேசியச் செயலராக இருந்தார். பாஜக மாநில பொதுச் செயலர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏற்கனவே வகித்துள்ளார். மேலும் தமிழக பா.ஜ.க.,வுக்கு தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply