தமிழகத்தில் 2016ல் நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும்' என்று தமிழக பாஜக புதிய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜனுக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதன் பின்னர், தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; :தமிழக பாஜக தலைவராக என்னை தேர்ந்தெடுத்த கட்சிதலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த தலைவர்கள், தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

கட்சிக்காக உழைத்தால் உண்மையான பலன்கிடைக்கும் என்பதற்கு உதாரணம் இந்த தலைவர் பதவி. ஒரு பெண் தலைவராக நிர்வகிப்பதை பெருமையாக நினைக்கிறேன். அரசியலில் பெண்கள் மிகப்பெரிய அங்கீகாரம் பெற உழைப்பேன்.மூத்த தலைவர்கள் வழிகாட்டுதலின்படி, தொண்டர்களின் ஒத்துழைப்போடு, தமிழக மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்த ஒவ்வொரு நிமிடமும் பணிசெய்வேன். 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய சக்தியாக பாஜக உருவெடுத்து மக்களுக்கு சேவைசெய்யும்.

2016ல் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை பாஜக ஏற்படுத்தும். மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply