வட்டார போக்குவரத்து அலுவலகங்களை (ஆர்.டி.ஓ., அலுவலகங்களை ) மூட மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அதற்குபதிலாக மாற்று அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது, அடுத்த சிலமாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடு வதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரதப் பழசாகிப்போன சில விதிமுறைகளையும், நடைமுறைகளையும் மாற்றுவதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு ஈடுபாடு காட்டிவருகிறது. சுதந்திர தினவிழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, திட்டக் கமிஷனுக்கு மாற்றாக வேறு ஒரு அமைப்பை உருவாக்க அரசு பரிசீலித்து வருவதாக கூறினார். இதன் தொடர்ச்சியாக, மண்டல போக்குவரத்து அலுவலகங்களையும் மூட மத்திய அரசு முயற்சிசெய்து வருவதாக அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகங்களின் பணிகளை மேற்கொள்ள தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்வதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்படும்,’ என்றார்.

மேலும், சாலைவிதிகளை மீறுவோர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, சாலை விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு வீடுதேடி நோட்டீஸ் வரும். நோட்டீஸ் கிடைக்க பெற்றவர்கள் கோர்ட்டிற்கு சென்று, அபராதத்தை செலுத்தவேண்டும். அவ்வாறு செல்லாதவர்களிடம் இருந்து மூன்றுமடங்கு அபராத தொகை வசூலிக்கப்படும். இந்தவகையில், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நகர போக்குவரத்து செயல்பாடுகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்

Leave a Reply