அசாமில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், அங்குள்ள காவல் நிலையத்துக்கு தீ வைக்க முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
9 பேர் சாவு

அசாமின் கோலாகட் மாவட்டம், நாகாலாந்து எல்லையில் அமைந்துள்ளது. இந்தமாவட்டத்தை சேர்ந்த கிராமவாசிகள் மீது, நாகாலாந்தை சேர்ந்த ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் சிலர் கடந்த சிலநாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்

இதைத்தொடர்ந்து அந்த மாவட்டத்தின் உரியாம் கட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறைவெடித்தது. எல்லைப்பகுதியில் பாதுகாப்பை ஏற்படுத்த தவறியதாக கூறி மக்கள் ஆங்காங்கே திரண்டு வன்முறையில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், வீடுகளும் அடித்துநொறுக்கப்பட்டன. கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக நடந்துவரும் இந்த வன்முறையில் ஏராளமானோர் காயமடைந்ததுடன், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள்வீடுகளை இழந்து உள்ளனர்.

அங்கு அமைதியை ஏற்படுத்த 1000 துணை ராணுவ வீரர்களை உள்துறை அமைச்சகம் அனுப்பிவைத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு

இதற்கிடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருவதை தொடர்ந்து, அசாம் நிலவரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு உள்துறை அமைச்சகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேட்டுக் கொண்டார்.

அவர் கேட்டுக்கொண்ட சிலமணி நேரத்துக்குள் இது தொடர்பான அறிக்கையை பிரதமர் அலுவலகத்துக்கு, உள்துறை அமைச்சகம் அளித்தது.

மேலும் அங்கு வன்முறையை கட்டுப் படுத்த, அசாம் மற்றும் நாகாலாந்து முதல்மந்திரிகளுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. 

Tags:

Leave a Reply