பா.ஜ,க தேசிய தலைவர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று ஆந்திரா தலைநகர் ஐதராபாத்திற்கு வருகை தர உள்ளார்.

இதுகுறித்து தெலுங்கானா மாநில பா.ஜ க தலைமை வெளியிட்டு்ள்ள அறி்க்கையி்ல் தெரிவித்திருப்பதாவது: கட்சியின் தேசியதலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக தெலுங்கானா மாநில தலை நகர் ஐதராபாத்திற்கு வருகைதர உள்ளார். முதல் நாள் நிகழ்வின் ஒருபகுதியாக கட்சி தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்துபேச உள்ளார். மறுநாள் செகந்திரபாத் நகரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு அமித்ஷா பேச உள்ளார். 119 உறுப்பினர்கள் கொண்ட தெலுங்கானா சட்டபேரவையில் பா.ஜ., சார்பில் ஐந்து உறுப்பினர்கள் எம்,எல்,ஏக்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது..

Leave a Reply